கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, ஸ்டாலின் முன்னிலையில்  இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்.   கவுண்டம் பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இருமுறை வென்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். ஆனால், ஜெயலலிரதா மரணத்துக்கு  பிறகு அதிமுக உடைந்து, மீண்டும் இணைந்தது, இரு தலைமைகளுக்கு இடையே நடைபெற்று வந்த மோதல், கோடநாடு கொலை கொள்ளை போன்றவற்றால் மனம் நொந்து, அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார்.

 கோவை மாவட்ட அதிமுகவில் முக்கிய நபராக பார்க்கப்படும் ஆறுகுட்டி  இன்று மாலை 6 மணிக்கு  கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.