இந்தியாவில் 2022-23 நிதியாண்டில் $28 பில்லியனாக இருந்த அந்நிய நேரடி முதலீடுகள் (FDI), 2023-24 நிதியாண்டில் $9.8 பில்லியனாக சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வியட்நாம், தென்னாப்பிரிக்கா, பிரேசில், தென் கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் FDI விதிகள், அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒன்றாக உள்ளதாக ‘தி இந்து பிசினஸ் லைன்‘ நாளிதழ் தெரிவித்துள்ளது.

உலகளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவின் பங்கு 2020-ம் ஆண்டில் 6.6%-ஆக இருந்ததாகவும் 2023-ல் 2.2% ஆக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) எட்டுவதில் இந்தியா கவனம் செலுத்தத் தவருவதால், SDGs சார்ந்த வாய்ப்புகளைத் தேடும் முதலீட்டாளர்களை இந்தியா இழக்கிறது என்றும்

பெரும்பாலான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை (BITs) நிறுத்துவது அல்லது மறுபரிசீலனை செய்யும் இந்தியாவின் முடிவால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இன்சூரன்ஸ், இ-காமர்ஸ் மற்றும் பல சில்லறை விற்பனை போன்ற துறைகளை தாராளமயமாக்க வேண்டும் என ‘தி இந்து பிசினஸ் லைன்’ பரிந்துரை செய்துள்ளது.

FDI விதிகளை எளிதாக்கவும் முதலீடுகளை தக்கவைக்கவும் இந்தியா தனது நிறுவன திறனை வலுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.