வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதுள்ள அதிபர் டொனால்டு டிரம்ப்பை, ஜோ பிடன் வெல்ல வாய்ப்புள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளன. அந்நாட்டில் 5 கோடி வாக்காளர்கள் அஞ்சல் வழியாகவும், நேரிலேயோ வாக்களித்துவிட்டனர். அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனாலும் கள நிலவரத்தில் அலசப்படும் பகுப்பாய்வின் அடிப்படையில் டிரம்ப்பை, ஜோ பிடன் வெல்வார் என்றே புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பிரபலமான தி எக்னாமிஸ்ட் என்ற சர்வதேச வார செய்தித்தாளானது, அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய சில புள்ளி விவரங்களையும், மதிப்பீடுகளையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தற்போதுள்ள அதிபர் டொனால்டு டிரம்ப்பை, ஜோ பிடன் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
தி எக்னாமிஸ்ட் இதழானது, ஒவ்வொரு நாளும், பொருளாதார குறியீடுகளுடன் மாநில மற்றும் தேசிய வாக்கெடுப்புகளை முன்கூட்டியே கணித்து அதன் தாக்கங்களை முன் அறிவிக்கும். ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு பிழை, வாக்குப்பதிவு அல்லது அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிரச்சார விளைவுகள் ஆகியவற்றை கணக்கிட வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் மாறுபடும்.
கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து, ஒவ்வொரு நாளும் யாருக்கு எத்தனை சதவிதம் வெற்றி வாய்ப்பு என்பதை அளவிட்டு வருகிறது. மார்ச் 1ம் பிடனுக்கு 56 சதவீதம் வெற்றி வாய்ப்பும், டிரம்ப்புக்கு 44 சதவீதம் வெற்றி வாய்ப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்ல போனால் மார்ச் மாதம் முழுவதும் இருவருக்கும் இடையேயான வெற்றி சதவிதம் இடைவெளி மிக குறைவாகவே இருந்தது.
ஆனால் ஏப்ரல் 16ம் தேதி முதல் இந்த கணக்கிட்டில் மாற்றங்கள் பதிவாகின. ஏப்ரல் 17ல் பிடனுக்கு 61 சதவீதமும், டிரம்புக்கு 39 சதவீதம் வெற்றி வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டன. அதே போன்று வாக்குகள் அடிப்படையிலான தேர்தல் வாக்குகள் (electoral votes) அடிப்படையில் பார்த்தால் ஏப்ரல் 2ம் தேதி பிடன் 274 வாக்குகளும், டிரம்ப் 264 வாக்குகளும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இருவருக்குமே உள்ள வித்தியாசம் வெறும் 10 தான் ஆகும். ஆனால், ஏப்ரல் 12ம் தேதி முதல் அதன் கணிப்புகள் சற்றே மாறுபாட்டை காட்டுகின்றன. அன்றைய நிலவரப்படி பிடனுக்கு ஏறுமுகமாகவும், டிரம்புக்கு இறங்குமுகமாகவும் வாக்கு வித்தியாசம் இருந்தது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிடனுக்கு 281 என்றும் டிரம்புக்கு 257 வாக்குகள் என்றும் இருந்தன. அதற்கடுத்த நாட்களில் வெற்றி வாய்ப்பு வித்தியாசம் இருவருக்கும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
நாட்கள் நகர,நகர ஜூன் மாதம் 7ம் தேதி கணிப்புகளின் முற்றிலும் மாற்றங்கள் நிரம்பிய ஒன்றாக மாறியது. அன்றைய தினத்தின்படி பிடனுக்கும் 334 இடங்களும், டிரம்புக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் 204 என்றும் அளவீடுகள் மாறின. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பிடனின் வாக்கு வித்தியாசம் ஏறிக்கொண்டே போனது. டிரம்பின் வெற்றி இடங்கள் வித்தியாசம் குறைந்தே வந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து, ஆகஸ்ட் 30ம் தேதி தான் டிரம்ப் 200 இடங்கள் என்பதை கடந்து 207 என்பதை எட்டி பிடிக்கிறார். அதற்குள் பிடன் 337 இடங்களை பெற்றுள்ளதாக தி எக்னாமிஸ்ட் அடிகோடிட்டு காட்டி இருக்கிறது.
அதன் பின்னரும் மேலும் முன்னேற்றம் இன்றி பிடன், டிரம்ப் இடையே தொடர்ந்து இதே நிலை நீடித்து, அக்டோபர் 24ம் தேதியன்று பிடனுக்கு 340 இடங்களும், டிரம்புக்கு 198 இடங்களுமே கிடைக்கும் என்று கூறுகிறது தி எக்னாமிஸ்ட். அதாவது பிடனுக்கு 91 சதவீதம் வெற்றி வாய்ப்புகளும், டிரம்புக்கு வெறும் 8 சதவீதம் வெற்றி வாய்ப்புமே உள்ளது என்று தி எக்னாமிஸ்ட் கணித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் வெற்றியை நிர்ணயிப்பது, மொத்த வாக்குகள் கிடையாது. மாநிலம் வாரியாக அளிக்கப்படும் 540 தேர்தல் குழு (Electoral College) வாக்குகளில் 270 வாக்குகள் பெறுபவரே அதிபராக முடியும்.
தேர்தல் குழுக்களை உருவகப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு பிழை, வாக்குப்பதிவு அல்லது அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிரச்சாரத்தின் விளைவுகள் ஆகியவற்றைக் கணக்கிட வேட்பாளர்களின் வாக்குப் பங்குகள் மாறுபடும்.
அதாவது மாநில அளவிலான வாக்கெடுப்புகள் மற்றும் அரசியல், பொருளாதார காரணிகளுடன் ஒருங்கிணைக்கிறது. ஒத்த மாநிலங்கள் ஒருவருக்கொருவர் செல்ல வாய்ப்புள்ளது என்பதை கணக்கிட முடிவதாக குறிப்பிடுகிறது. அதாவது டிரம்ப் மினசோட்டாவை வெல்கிறார் என்றால், விஸ்கான்சின்னையும் அவர் வெல்வார்.
கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன், ஒரேகான், நெவேடா, கொலராடோ, நியூ மெக்சிகோ, மின்னசோட்டா, இல்லிநோய்ஸ், மிச்சிகன், மசாசூட்ஸ், மேரிலேன்ட, நியூஜெர்சி, நியூ ஹாம்ப்ஷையர் உள்ளிட்ட மாநிலங்கள் பிடனுக்கு கை கொடுக்கும் என்று தெரிகிறது. பிடனுக்கு 99 மாநிலங்கள் பாதுகாப்பானவை, 85 முதல் 99 வரையான மாநிலங்கள் வெற்றியின் அருகிலும், 65 முதல் 85 மாநிலங்கள் வெற்றியை தரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 50 முதல் 65 மாநிலங்களில் யாருக்கு வெற்றி என்ற நிச்சயமற்ற நிலைமை நீடிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டிரம்புக்கோ, இடாஹோ, ஒட்டா, இன்டியானா, டென்னிஸ்சி, லூசியானா, மிஸ்ஸிசிப்பி, ஆர்கான்சஸ், கன்சாஸ், நெப்ரஸ்கா, வடக்கு டகோடா, தெற்கு டகோடா, ஒக்கலாமா, கெண்டக்கி உள்ளிட்ட மாநிலங்கள் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று டிரம்புக்கும் 99 மாநிலங்கள் பாதுகாப்பானவை, 85 முதல் 99 மாநிலங்கள் வெற்றியின் நெருக்கத்திலும், 65 முதல் 85 மாநிலங்கள் வரை வெற்றியை பெறலாம் என்றும் அளவிடப்பட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் 50 முதல் 65 வரையான மாநிலங்கள் யார் வெல்வார்கள் என்ற நிச்சயமற்ற தன்மையே நீடிக்கிறது என்று அளவிடுகள் காட்டுகின்றன.
இந்த கணிப்புகளில் மாநிலங்களின் முக்கியத்துவத்தை அளவிட இரண்டு அளவீடுகள் இந்த கணிப்பு முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்கிறது தி எக்னாமிஸ்ட். ஒட்டுமொத்தமாக தி எக்னாமிஸ்ட் கருத்துக்கணிப்புகள், அளவீடுகள் மற்றும் புள்ளி விவரங்களின் கணக்குப்படி பிடன் முன்னேறுகிறார் என்பது தெளிவாகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்த வரை கடைசி 10 நாட்களில் அரசியல் பூகம்பம் என்று ஏதாவது அரங்கேறுவது கடந்தகால அரசியலில் நடந்த நிகழ்வுகள். ஆனால் அதுபோன்று அடுத்த 10 நாட்களில் ஏதேனும் மாற்றங்கள் நடக்குமா என்று என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..!!