தமிழக முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் போது ஃபோர்டு கார் நிறுவன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
2021ம் ஆண்டு தனது இந்திய உற்பத்தி மையங்களை மூடிவிட்டு வெளியேறிய ஃபோர்டு நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மீண்டும் துவக்க அனுமதி கோரியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மனித ஆற்றல் மற்றும் உற்பத்தி நிபுணத்துவத்தைப் பயன்படுத்த உத்தேசித்துள்ள ஃபோர்டு நிறுவனம், உலக சந்தையின் தற்போதய தேவையை கவனத்தில் கொண்டு தனது சென்னை தொழிற்சாலையை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது.
12,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கிவந்த சென்னை ஃபோர்டு உற்பத்தி மையம் தனது ஊழியர்களின் எண்ணிக்கயை மேலும் 2500 முதல் 3000 பேர் வரை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஃபோர்டின் இந்த ரீ-என்ட்ரி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசின் தொடர்ச்சியான ஆதரவிற்கு அந்நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளதோடு மறைமலைநகரில் உள்ள தனது தொழிற்சாலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியுள்ளது.
இந்திய சந்தையை மீண்டும் குறிவைக்கிறது அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு