டெல்லி: ஃபோர்ப்ஸ் இதழ் இந்தியாவின்  முதல் 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் முதலிடத்தில் அம்பானியும், 2வது இடத்தில் அதானியும் இடம்பெற்றுள்ளனர்.

ஃபோர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும்,  கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதுபோல, 2021ம் ஆண்டு இந்திய அளவிலான முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில்,  முதல் 100 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 775 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 257 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள  நூறு பேரில் 61 பேரின் சொத்து மதிப்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. மேலும் 80 சதவிதத்துக்கும் அதிகமானோருக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

முதல் இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். கொரோனா காலக்கட்டத்திலும் அவரது சொத்து மதிப்பு  50% அளவுக்கு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2008ம் ஆண்டு முதல் முகேஷ் அம்பானியே தொடர்ந்து, இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக திகழ்கிறார். அவரின் சொத்து மதிப்பு 92.7 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இந்தியாவின் 2வது கோடீஸ்வரர் என்ற பெருமையை, கவுதம் அதானி பெற்றிருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 74.8 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஹெச்.சி.எல் நிறுவன தலைவருமான சிவ நாடார் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். ஐடி துறை வளர்ச்சி காரணமாக சிவ நாடாரின் சொத்து மதிப்பில் 10.6 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது.

டி-மார்ட் நிறுவனரான ராதாகிருஷ்னன் தமானி, 4வது இடத்தை தக்க வைத்திருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 29.4 பில்லியன் டாலர்கள் ஆகும்.

தடுப்பூசி தேவை அதிகரித்ததன் காரணமாக சைரஸ் பூனாவாலா டாப் 5 கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர்கள் பட்டியல் விவரம் (டாலர்கள் மதிப்பில்)

 

  1. முகேஷ் அம்பானி – 92.7 பில்லியன்

 

  1. கவுதம் அதானி – 74.8 பில்லியன்

 

  1. சிவநாடார் – 31 பில்லியன்

 

  1. ராதாகிருஷ்ணன் தமானி – 29.4 பில்லியன்

 

  1. சைரஸ் பூனாவாலா – 19 பில்லியன்

 

  1. லக்ஷ்மி மிட்டல் – 18.8 பில்லியன்

 

  1. சாவித்ரி ஜிண்டால் – 18 பில்லியன்

 

  1. உதய் கோட்டக் – 16.5 பில்லியன்

 

  1. பலோன்ஜி மிஸ்திரி – 16.4 பில்லியன்

 

  1. குமார் பிர்லா – 15.8 பில்லியன்