ராய்ப்பூர்:
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் இலவச ரேஷன் வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்து உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 36 பேருக்கு ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில், 32 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு இலவச ரேசன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ரேசன் கார்டு இல்லாத பலர் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாநிலத்தில் யாரும் வெறும் வயிற்றில் தூங்கக் கூடாது என்று கூறியுள்ள மாநில முதல்வர், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்கள் இலவசமாக பொருள்கள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
[youtube-feed feed=1]