டில்லி

டந்த 2008 முதல் 2016 வரை நடந்த 300 காவல் மரணங்கள் வழக்கில் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் ஜுன் 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சார்பில் காவல் மரணம் அடைந்தோருக்கு இரங்கல் நாளாக அனுசரிக்கப்படுகிறது.   கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி அன்று காவலில் உள்ளவர்கள் மீதான கொடூர தாக்குதல், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகளுக்கு எதிராக தீர்மானம் இயற்றப் பட்டது.   அதையொட்டி இந்த நாள் இவ்வாறு கடந்த 1998 முதல் இரங்கல் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் இது போல பல காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.   மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகும்.  தேசிய குற்றவியல் பதிவுத் துறை வெளியிட்டுள்ள விவரங்களின் படி கடந்த 2008 முதல் 2016 வரை மொத்தம் 300 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.   அதே நேரத்தில் 1997 முதல் 2016 வரையிலான 30 வருடங்களில் மொத்தம் 790 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த 8 வருடங்களில் ஆந்திராவில் அதிகமாக 59 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.    இதற்காக 34 காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.   அசாம் 29 மரணங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்த மாநிலத்தில் நிகழ்ந்த 29 மரணங்களில் 31 காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  மூன்றாவது இடமான உத்திரப் பிரதேசத்தில் நடந்த 14 மரணங்களில்  10 காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள்து.

கடந்த 2008 முதல் 2016 வரை  குறைந்த அளவில் காவல் மரணங்கள் நிறைந்த மாநிலங்களாக தமிழகம் மற்றும் திரிபுர மாநிலங்கள் உள்ளன. இரு மாநிலங்களிலும் ஒரு மரணம் மட்டுமே நிகழ்ந்துள்ளது.  மேலும் ஒரு காவல்துறையினர் மட்டுமே குற்றம் சாட்டபட்டுள்ளார்.   அடுத்ததாக ஒரிசாவில் 4 மரணங்களில் 4 காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த 300 காவல் மரணங்களில் இதுவரை ஒருவருக்கு கூட தண்டனை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  காவல் மரண வழக்கில் சமீபத்தில் குஜராத் மாநில ஐ பி எஸ் அதிகாரி சஞ்சிவ் பட் ஆயுள் தண்டனை பெற்றார்.   இது சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.