சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலியாக, வரும் 16ந்தேதி (நாளை மறுதினம்) தமிழக பல்கலைக்கழக வேந்தராக உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக வேந்தரான முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா, வேளாண்மைப் பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா, தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா, மீன்வள பல்கலைக் கழக மசோதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவற்றிற்கு ஒப்புதல் கிடைத்தது. அவை தற்போது சட்டமாகவும் அங்கீகரிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்கலைழக்க வேந்தராக இதுவரை இருந்து வந்த கவர்னர் நீக்கப்பட்டு மாநில முதலமைச்சர் வேந்தரானார். அதன்படி தற்போது பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வரான மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக ஏப்.16இல் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில், உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்.16இல் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம். முதன்முறையாக முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.
இது தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறை என்று கூறப்படுகிறது.