மதுரை இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் சுயஉதவிக்குழு பெண்களின் கருவாட்டு கடை (உலர் மீன்) அமைக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரயில்வேயில் முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனை கூடம் (கருவாடு கடை) திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் பெண்களின் முன்னேற்றத்திற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு வசதிகளை செய்து வருகின்றனர். ஒரு பகுதியாக மகளிர் சுயஉதவிக்குழு உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான வங்கி கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. அதன்மூலம் பல்வேறு தொழில்களை அவர்கள் செய்து, தங்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவப் பெண்களின் மகளிர் சுய உதவி குழுவினர், உலர் மீன் எனப்படும் கருவாட்டு கடையை தொடங்கி உள்ளனர்.
மத்திய ரயில்வேயின் ஆதரவுடன், மதுரை ரயில் நிலையத்தில் இந்த உலர் மீன் (கருவாட்டு கடை) தொடங்கப்பட்டு உள்ளது. மதுரை ரயில் நிலையத் திலிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பயணிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் கடை துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் பாலித்தீன் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உலர் மீன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இங்கு விற்பனை செய்யப்படும் கருவாடுகள், தரமாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் ரயில் பயணிகள் மட்டுமின்றி, மதுரை மாநகர மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஏற்கனவே மதுரை ரயில் நிலையத்தில், “ஒன் ஸ்டேஷன் ஒன் பிராடக்ட்” என்ற பாரதப் பிரதமரின் திட்டத்தின் கீழ் மதுரைக்கே உரித்ததான சுங்குடி சேலை விற்பனை கூடம் ஏற்கனவே இயங்கிவருகிறது. தற்போது இந்திய ரயில்வேகளில் முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் லூமிரியன்ஸ் டிரை பிஷ் ஹட் என்னும் கருவாட்டு விற்பனை கூடம் இன்று துவங்கப்பட உள்ளது.
விமான நிலையங்களில் அதிநவீன விற்பனை கூடங்கள் இருக்குமோ அதே போன்று வரக்கூடிய வாடிக்கையாளர்களை கவரும் வண்ணமும் அவர்கள் எளிதில் பொருட்களை வாங்கிச் செல்லும்வகையில் 100 ரூபாயில் இருந்து கருவாடுகள் விற்கப்பட உள்ளன.