டில்லி:

கணித ஆசிரியர் பணிக்கு பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பழைய ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில், “பழைய ரூபாய் நோட்டுகளை அரசு தொடர்ந்து எண்ணி வருகிறது. மேலும் கணித ஆசிரியர்களைத் தேடி வருகிறது.

பிரதமரின் அப்ளிகேஷனில் சென்று கணித ஆசிரியர் பணிக்கு விண்ணப்பியுங்கள்” என்று கிண்டலடித்திருக்கிறார்.