டில்லி

ந்திய நிறுவனங்கள் செயற்கைக்கோளை நிறுவ இஸ்ரோவுக்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கபட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவி வருகிறது.   தற்போது பல நிறுவனங்களுக்குச் சொந்த செயற்கைக் கோள் தேவை அவசியமாகி உள்ளது.  இந்த நிறுவனங்கள் மின்சக்தி, விண்வெளிப் பயணம், விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றை நிகழ்த்தி வருகின்றன.

எனவே பல நிறுவனங்களும் தங்கள் சொந்த விண்கோளை செலுத்தி வருகின்றன.  இந்த விண்கோளை இஸ்ரோ தனது ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் நிறுவுகிறது.  இவ்வாறு விண்ணில் நிறுவ இஸ்ரோ கட்டணம் வசூலிக்கிறது.   இதில் கட்டணத்துடன் இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 18% ஜி எஸ் டி செலுத்டஹ வேண்டியது உள்ளது.  ஆனால் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு ஜி எஸ் டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவை வரி செலுத்தத் தேவை  இல்லை.

இதனால் பல நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டுக் கிளைகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவுக்கு ஆர்டர் அளிக்கின்றன.   தற்போதுள்ள நிலையில் இந்திய நிறுவனங்களுக்கு இஸ்ரோ மூலம் மட்டுமே  செலுத்த வேண்டிய நிலை உள்ளது  ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த பணிகள் நடந்தாலும் இந்திய அரசு அனுமதி அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.