சென்னை

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல்  சென்னையில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகதெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.