புனே:
உங்கள் வாழ்க்கை திரைப்படமானால் யார் கதாநாயகி என்ற கேள்விக்கு, கட்சிப் பணியே என் கதாநாயகி என்று பதில் அளித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
புனேயில் கல்லூரி மாணவ,மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது;
கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபின், சகோதரி பிரியங்கா காந்தி ட்வீட் செய்து, என் சகோதரை பார்த்துக்கொள் வயநாடே என்று பதிவிட்டிருந்தார்.
என் சகோதரர் ராகுல் காந்தி தைரியமானவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து ராகுல் காந்தியிடம் மாணவிகள் கேள்வி எழுப்பியபோது, அனுபவத்திலிருந்து தான் எனக்கு தைரியம் வந்தது. எதையும் எதிர்கொண்டு ஏற்றுக் கொள்வேன்.
உண்மையை ஏற்றுக் கொண்டால் நீங்கள் தைரியசாலி. பொய்யை ஏற்றுக் கொண்டால் நீங்கள் பயந்தவர் என்று அர்த்தம் என்று பதில் அளித்தார்.
தனது பாட்டி இந்திரா காந்தியை நினைவுகூர்ந்த அவர், பாட்டியின் பின்னே அமைதியாக சென்று பயமுறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் என்றார்.
வயநாட்டில் போட்டியிட முடிவு செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, மலை நிறைந்த கேரளத்தின் உணவு எனக்கு பிடிக்கும். கொஞ்சம் காரமாக இருக்கும். பரவாயில்லை நான் சமாளித்துக் கொள்வேன் என்றார்.