டில்லி

க்களவை தேர்தலில் அசாம் மாநில நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா போட்டியிடப் போவதில்லை எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும் அசாம் மாநில நிதி அமைச்சருமான பிஸ்வா சர்மா வடகிழக்கு பகுதி பாஜகவை கவனித்து வருகிறார்.   நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அவர் அசாம் மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

அசாம் மாநிலத்தில் போட்டியிட  தகுதி உள்ளவர்கள் பட்டியலை அசாம் பாஜக தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் தயாரித்துள்ளார்.   இதில் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பெயர் இடம் பெறவில்லை.   இது அசாம் மாநில பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து பாஜக தலைவர் அமித்ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தற்போது வடகிழக்கு பகுதியை ஹிமந்தா பிஸ்வா சர்மா கவனித்து வருகிறார்.  இதனால் மத்திய பாஜக தலைமை அவரை தேர்தலில் நிறுத்தவில்லை.  அவருக்கு பொறுப்புக்கள் அதிகம் உள்ளதால் அவர் அதை கவனித்து கட்சியை வலுப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

கட்சியின் இந்த முடிவுக்கு அசாம் பாஜகவினர் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன்.   இந்த முடிவினால் அசாம் மற்றும் வடகிழக்கு பகுதி முழுவதுமே நல்ல முன்னேற்றத்தை காணும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.   அத்துடன் இந்த பகுதியின்நட்சத்திர பேச்சாளர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பாஜக வெற்றிக்கான முழு  பொறுப்பும் உள்ளது” என பதிந்துள்ளார்.