250 ஆசிரியர்களுக்கு 6 ஆண்டுகளாகச் சம்பளம் இல்லை..
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை பார்த்ததாகக் கணக்குக் காட்டி. 13 மாதங்களில் ஒரு ஆசிரியை ஒரு கோடி ரூபாய் ஊதியம் பெற்ற செய்தி அறிவோம்.
இதற்கு நேர் மாறாகக் கேரளாவில் 250 ஆசிரியர்களுக்குக் கடந்த 6 ஆண்டுகளாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
அங்குள்ள மேல்நிலைப்பள்ளிகளில் மாநில அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரம் மூலம் 6 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இந்த நியமனத்துக்குக் கேரள அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
எனவே 250 ஆசிரியர்களால் 6 ஆண்டுகளாகச் சம்பளம் பெறமுடியவில்லை.
உடனடியாக இந்த ஆசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்காவிட்டால், பணியில் சேரும் வயது உச்சவரம்பு காரணமாக இவர்கள் வேலை இழக்க நேரிடும்.
எம்.ஏ., பி.எட். எம்.பில். என உயர் படிப்பு படித்த இந்த ஆசிரியர்களில் சிலர் பி.எச்.டி பட்டமும் பெற்றுள்ளனர்.
— .பா.பாரதி