
நெட்டிசன்L
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar Pkp) அவர்களின் முகநூல் பதிவு:
·நேற்று திருச்சியில் என் மாமனாரிடம் பேசிக் கொண்டிருந்த்போது ஒரு சுவாரசியமான தகவல் சொன்னார்.(அவர் ஒரு தகவல் களஞ்சியம். எந்தத் துறையைப் பற்றிப் பேசினாலும் அது குறித்து சில வரலாற்று உண்மைகள் சொல்வார்)
காமராஜர் முதல்வராகவும் எதிர்கட்சித் தலைவராக அண்ணாதுரையும் இருந்தபோது, நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் சட்டசபையில்,”விரைவில் நியாய விலைக் கடைகள் துவங்கப்படும்”

என்று சொன்னார். உடனே கலைஞர் எழுந்து,”அப்படியென்றால் இதுவரை செயல்பட்டு வருபவை எல்லாம் அநியாய விலைக் கடைகளா?” என்று கேட்டார். சபையில் அத்தனைப் பேரும் அந்த உடனடி பதிலை கைதட்டி ரசித்தார்கள்.
உடனே சி.சுப்பிரமணியம்,”உங்கள் தலைவரை அறிஞர் அண்ணாதுரை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று அர்த்தமா?” என்று கேட்க.. அதையும் ரசித்து கை தட்டினார்கள்.
(இப்போது போல அனைவரும் ஆர்ப்பரித்து எழுந்து.. வசை பாடி.. ரகளை செய்து.. கூண்டோடு வெளியேற்றப்பட்டு.. இதெல்லாம் எதுவும் நிகழவில்லை)
Patrikai.com official YouTube Channel