டெல்லி,
டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கள் தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில் பளுதூக்கும் வீரர் சாக்ஷாம் யாதவ் சிக்கி ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீப நாட்களாக வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தலைநகர் டில்லியில் நிலவி வரும் கடும் பொழிவு காரணமாக ரெயில் சேவை, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்நிலையில், டில்லியில் பனி மூட்டம் காரணமாக 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், 36 ரயில்கள் தாமதமாக வரும் என்றும், 9 ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேவேளையில் சாலை விபத்துக்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக, டெல்லி – சண்டிகார் தேசிய நெடுஞ்சாலையில் பளு தூக்கும் வீரர்கள் சென்ற கார் சாலை மைய தடுப்பு மற்றும் சாலையோர மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கய வீரர்கள் டெல்லியில் இருந்து பானிபட் சென்ற போது காலை 4 மணியளவில் அலிபுர் கிராமத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது
விகத்தில் சிக்கியவர்கள் உலக சாம்பியன் சாக்ஷாம் யாதவ் மற்றும் பாலி, ஹரீஸ், தின்கு மற்றும் சுராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.