டெல்லி: பொருளாதார வளர்ச்சியானது நடப்பு நிதியாண்டில் எதிர்மறையாக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: நாட்டின் பொருளாதாரம், மீள்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆனால், நடப்பு நிதியாண்டில் ஜிடிபியானது எதிர்மறையாகவே, பூஜ்யத்தையோ நெருங்கும்.
லாக்டவுன் தளர்வுகளால் பெரு நிறுவன பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அடுத்து வரக்கூடிய பண்டிகை காலம் பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக ஏப்ரல் 2020 முதல் அடுத்தாண்டு மார்ச் நிதியாண்டின் ஜிடிபியானது எதிர்மறையாக இருக்கும். அடுத்த நிதியாண்டிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும் என்றார்.