பட்ஜெட் தொடர்ச்சி….

விவசாயம், அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய துறைக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ .2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு  விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.

விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி

ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு

நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்

6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தோட்டக்கலைத் துறையின் உற்பத்தி உணவு தானியங்கள் உற்பத்தியைவிட அதிகமாக உள்ளது

மழை குறைந்த இடங்களில் ஒருங்கிணைந்த விவசாயத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

தோட்டக்கலைத் துறையின் உற்பத்தி உணவு தானியங்கள் உற்பத்தியைவிட அதிகமாக உள்ளது

தரிசு நிலம் வைத்துள்ள விவசாயிகள் சூரியசக்தி மின் உற்பத்திப் பிரிவுகளை அமைக்கவும், உபரி மின்சாரத்தை சூரியசக்தி மின் தொகுப்புக்கு விற்பனை செய்யவும் உதவி செய்யப்படுவதுடன், தரிசு நிலமே இல்லாத வகையில் அவர்களது வாழ்க்கை மேம்படுத்தப்படும்

முன்மாதிரி விவசாய நில குத்தகைச் சட்டம் 2016, முன்மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடைச் சந்தை சட்டம் 2017, முன்மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த விவசாயம் மற்றும் சேவைகள் மேம்பாடு மற்றும் வசதி சடட்ம் 2018  போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.

தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படும்

பெண்கள் சுய உதவிக்குழுக்காக  தான்ய லக்ஷ்மி திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். நபார்ட் மற்றும் முத்ரா திட்டத்தின் கீழ் இவர்களுக்கு தேவையான உதவி வழங்கப்பட்டும்.

நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்  இளம் பொறியாளர்களுக்கு ஒரு வருடம் வரை இன்டர்ன்ஷிப் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அழிந்துபோகக்கூடியவற்றுக்கான தடையற்ற தேசிய குளிர் விநியோக சங்கிலியை உருவாக்க, இந்திய ரயில்வே பிபிபி மாடல் மூலம் கிசான் ரெயிலை அமைக்கும், இதனால் அழிந்துபோகக்கூடிய பொருட்களை விரைவாக கொண்டு செல்ல முடியும். கிருஷி உதான் சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில் MoCA ஆல் தொடங்கப்படும்.