சென்னை: கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வடிந்ததால் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக கடலோர மற்றும் வட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஏரிகள் நிரம்பிய நிலையில், சாத்தனூர் ஏரியை நள்ளிரவில் முன்னறிவிப்பு இன்றி அதிகாரிகள் திறந்து விட்டதால், வட மாவ கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சாலைகளிலும் வெள்ளம் ஓடியது.
இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் ரயில் தண்டவாளங்களும் தண்ணீரில் மூழ்கியதால், ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் அருகே அரசூர் பகுதியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படுவதை தடுக்க, அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள சிறு பாலம் உடைந்ததால் மடப்பட்டு அருகே போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னை வரும் வாகனங்கள் பண்ருட்டி வழியாக திருப்பி விடப்பட்டன.
புயல் வலுவிலந்து விட்ட போதிலும், பல பகுதிகளில் இன்னமும் வெள்ள நீர் வடியவில்லை. இந்த நிலையில், , சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் வடிந்துவிட்டதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ள து. அரசூர், இருவேல்பட்டு இடையே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்துவிட்டது. இருப்பினும், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.