சரியாக பணிபுரியாத ஊழியர்களை பொது இடத்தில் வைத்து அதிகாரிகள் பிரம்பால் அடித்தது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள ஊரக வணிக வங்கிகளில் ஒன்று ட்சாங்செ என்பதாகும். இந்த வங்கி ஊழியர்கள் 200 பேருக்கு கடந்த சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது சரியாக பணிபுரியாத ஊழியர்களை மேடையில் வைத்தே அவர்களின் பின்புறம் பயிற்சியாளர் பிரம்பால் அடித்தார்.
இந்த காட்சி வலைதளத்தில் பரவ.. பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பயிற்சியாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel