டெல்லி
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டெல்லியில் விமான சேவைகல் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன்.’

இன்று காலை முதல் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்த. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டபோதும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சுரங்க பாதைகளில் தேங்கிய மழைநீரில் மூழ்கியுள்ளது பற்றிய புகைப்படங்கள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வாகனங்கள் மழைநீரில் மிதந்தபடி செல்கின்றன. மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. சாணக்யபுரி, ஐ.டி.ஓ., சுப்ரதோ பூங்கா, நாணக்புரா மற்றும் தவுலா கான் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
திடீர் பருவ மாறுதலால் விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. 49 விமானங்கள் நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. எனவே டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தன்னுடைய பயணிகளுக்கு பயண அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. விமான சேவையை பற்றி அவ்வப்போது உறுதிப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.