சென்னை

நேற்றிரவு சென்னை நகரில் கனமழை பெய்ததால் விமான சேவை 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

நேற்றிரவு 8 மணி முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து பெய்தது. அத்துடன் பலத்த காற்றும் வீசி வருகிறது.  எனவே, சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.

காற்று, மழை காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு கோவையில் இருந்து வந்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு பலத்த காற்றால் விமானம் தரையிறங்க அனுமதி அளிக்க முடியவில்லை., இண்டிகோ விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.

இந்த நடவடிக்கை விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளின் உத்தரவின்படி எடுக்கப்பட்டு உள்ளது.  மேலும் வளைகுடாவில் இருந்து வந்த விமானமும் மழையால் தரையிறங்க முடியாமல் இருந்தது. மழையால் 2 விமானங்கள் தரையிறங்குவது மற்றும் புறப்பாடு பாதிக்கப்பட்டது.

மழை மற்றும் பலத்த காற்றால், 20 நிமிடங்கள் வரை விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது., விமான பயணிகளும், விமானத்தில் வரும் பயணிகளை வரவேற்க காத்திருந்த உறவினர்களும் அவதிக்கு ஆளானார்கள்.