ஹாலிபேக்ஸ்
தென் கொரிய விமான விபத்தை தொடர்ந்து கனடாவில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு வந்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால் விமானம் வெடித்து சிதறி 62 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. பிறகு விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டசூழலில், அதில் பயணம் செய்த 179 பேரும் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று கனடாவின் ஹாலிபேக்ஸ் விமானநிலையத்தில் ‘ஏர் கனடா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் 80 பயணிகளுடன் தரையிறங்கும்போது அதன் லேண்டிங் கியரில் பழுது ஏற்பட்டது. இதனால் இறக்கை பகுதி ஓடுபாதையில் உரசி, விமானத்தல் திடீரென தீ பற்றியது.
விமான நிலைய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர். விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 80 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.