டில்லி,
ஐந்து பொது காப்பீட்டு நிறுவனங்களின் 25 சதவிகித பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவையின் கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகுறித்து நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அதற்கான இசைவை அளித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருண்ஜேட்லி கூறியதாவது,
நியூ இந்தியா இன்சூரன்ஸ் (New India Assurance), யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (United India Insurance), ஓரியண்டல் இன்சூரன்ஸ் (Oriental Insurance), நேஷனல் இன்சூரன்ஸ் (National Insurance), ஜெனரல் இன்சூரன்ஸ் (General Insurance Corporation of India) ஆகிய 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இந்த நிறுவனங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும், மூலதனம் மற்றும் வளங்களை உயர்த்தவும் இந்த பங்குகள் விற்பனை உதவும் என எதிர்பார்க்கப்படுதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த நிறுவனங்களில் உள்ள அரசாங்கத்தின் இருப்புக்களான 100 சதவிகிதத்தில் இருந்து 25 சதவீதம் பங்குகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் நிதி தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறினார்.
இதற்கான முடிவு மத்திய கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.