தாய்நாட்டிற்காக ஒற்றன் வேலைப்பார்த்ததால் தண்டனை?
இந்தியத் தூதரக அதிகாரிகள் அஜய் குமார் மிஸ்ரா மற்றும் ருத்ரநாத் ஜுஹா ஆகிய இருவரும், கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று அங்குள்ள துறைமுகத்தில் வேலைபார்த்து வரும் அப்பாவி இந்தியர்களை மிரட்டி கப்பல் வரும்நேரம் குறித்த தகவல்களை தங்களுக்கு எச்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் அனுப்பும்படி கட்டாயப் படுத்தி, பிரகு அவர்களே இந்தியர்களை அபுதாபி போலிசிடம் சிக்கவைத்தனர் எனும் பரபரப்பு குற்றச்ச்சாட்டு வைக்கப் பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சிரையில் வாடும் இந்தியர்களை விடுதலை செய்ய ஏர்பாடு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பத்து வருட சிறைத் தண்டனை( ஒரு மில்லியன் திர்ஹாம் அபராதம் ) அனுபவித்து வருகின்றனர். ஷீஹானி என்பவர் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்துள்ளார்.
மூன்று மலையாளி உட்பட ஐந்து இந்தியர்களின் உறவினர்களுடன், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 14 அன்று குறை கேட்பு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஷஃபிஃக் கூருகையில், சிறையில் உள்ள மூவரும் ஒரே போன்று திட்டமிட்டு சிக்கவைக்கப் பட்டுள்ளனர். இவர்களை மிரட்டி தகவல் அனுப்ப வைத்து விட்டு, ஒருமணி நேரத்திற்குள் சி.ஐ.டி போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர். அந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் வங்கிக் கணக்குகளை சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த இரு அதிகாரிகளும் இரட்டை ஏஜன்ட்களாக செயல்பட வாய்புள்ளது.எனவே அவர்களை விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும். ஐந்து இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இரு அதிகாரிகளையும் தொடர்புகொள்ள நாம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஐவர் விவரம்:
முஹ்ஹம்மது இப்ராஹிம், வயது 42, முவட்டுபுழா, எர்னாக்குளம்.
மனர்தாடி அப்பாஸ், வயது 46, மலப்புரம்
ஷீஹானி, திருவனந்தபுரம்.
குவெரேஷி, ஹைதரபாத்
மற்றும் ஒரு தமிழர்.