திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ள சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் குளத்தி துணி துவைக்கும் போது,  நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்றபோது ஒன்றன்பின் ஒன்றாக 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுமதி தனது 15 வயது மகள் அஸ்விதாவுடன் அங்காளம்மன் கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்மணி மற்றும் சிறுமிகள் ஜீவிதா, நர்மதாவும் குளத்திற்கு வந்துள்ளனர்.

இந்த சிறுமிகள் மூன்று பேரும் குளத்தில் இறங்கி ‘விளையாடிக்கொண்டே குளிக்கும்போது, ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட, அதைக்கண்ட  துணைத்துவைக்கொண்டிருந்த சுமதியும், ஜோதிலட்சுமி முயற்சி மேற்கொண்டனர். அப்போது அவர்களும் குளத்தில் மூழ்கினர். தொடர்ந்து அனைவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து வந்த   தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய 5 பேரையும் சடலங்களாக மீட்டனர்.

குளத்தில் மூழ்கி இறந்தவர்களின் சுமதி(38), அஸ்திதா(14), ஜீவிதா(14), சுகந்தி(38), ஜோதி ஆகியோர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.