சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாளை (18ந்தேதி) முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி யுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அனைத்து மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர் களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது .