ஸ்ரீஹரிகோட்டா
இன்று இரவு 9.58 மணிக்கு பி எஸ் எல் வி சி 60 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது..
இன்று இரவு 9.58 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. எனவே இதற்கான இறுதிக்கட்டப் பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.
ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்று வட்டப்பாதைகளில் 2 செயற்கைக் கோள்களும் நிலைநிறுத்தப்படுகின்றன.
தமிழக மீன்வள துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி மீனவர்கள், ராக்கெட் ஏவுதலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.