ண்ணூர்

ந்தியக் கடற்படையில் முதல் முதலாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் சுபாங்கி ச்வரூப்.  இவர் முதல் முதலாக கடற்படையின் விமான ஓட்டியாக நியமிக்கப் பட்டுள்ளார். கடற்படையில் ஏற்கனவே பல பெண் அதிகாரிகள் உள்ளனர்.   கடற்படையின் விமானியாக ஒரு பெண் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

டில்லியை சேர்ந்த ஆஸ்தா சேகல், புதுச்சேரியை சேர்ந்த ரூபா மற்றும் கேரளாவை சேர்ந்த சக்தி மாயா ஆகியோர் கடற்படை ஆய்வாளர் கிளையில் பெண் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்தப் பதவிகளிலும் பெண்கள் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.  இந்தக் கிளை நேவியின் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை ஆய்வு செய்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இவர்கள் நால்வருக்கும் மேலும் சில பயிற்சிகளுக்குப் பின் முழு நேரப் பணியில் அமர்த்தப் படுவார்கள் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது தவிர சுபாங்கி ஐதராபாத்தில் உள்ள விமானப் படை அகாடமிக்கு பயிற்சிக்கு அனுப்பப் படுவார் எனவும் தெரிவித்தனர்.