
அலகாபாத்: நாட்டில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான பல்கலைக்கழகம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைகிறது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; உத்திரப்பிரதேச மாநிலம் குஷிங்கர் மாவட்டத்திலுள்ள பாசில் நகரில், திருநங்கைகளுக்கான முதல் பல்கலைக்கழகம் அமைகிறது.
இந்தப் பல்கலையில், 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் இரண்டு குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படும் பின்னர் அடுத்தடுத்த மாதங்களான பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பிற வகுப்புகள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கங்கா சிங், “திருநங்கைகள் கல்வி அறிவைப் பெறுவதன் மூலம், நாட்டிற்கு புதிய சேவையை வழங்க முடியும்” என்றார்.
இந்த முயற்சியை திருநங்கை சமூகத்தினர் பரவலாக வரவேற்றுள்ளனர். சமூகத்தில் மரியாதையைப் பெற்றுத்தரும் சக்தி கல்விக்கு உண்டு என்றும், இது அனைத்தையும் மாற்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
[youtube-feed feed=1]