வாஷிங்டன்

ங்கிலாந்து அரச குடும்பத்தில் முதல் முறையாக மேகன் மார்க்கல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி ஆகியோர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினர்.   இங்கிலாந்து அரசு அளித்த அனைத்து பட்டங்கள் மற்றும் விருதுகளை இருவரும் துறந்தனர்.

இதில் ஹாரி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் மற்றும் அவர் மனைவி மேகன் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார்.   நேற்று நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மேகன் வாக்களித்துள்ளார்.

மேகன் தாம் யாருக்கு வாக்களித்தார் என்பதை சொல்ல மறுத்துள்ளார்.  அத்துடன் அவர் எந்த மாகாணத்தில் மற்றும் எந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தர் என்பதும் வெளியிடப்படவில்லை.

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் முறையாகும்.