சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில்  10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையின் புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த  10 வழி சாலை 2026க்குள் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை, சுமார் 132 கி.மீ. நீள புறவட்டச் சாலை  அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த 2024ல் வெளியான நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை எல்லைச் சாலை என மறுவடிவமைப்பு செய்யப்பட்டு மறுபெயரிடப்பட்ட இந்த பசுமைவழி விரைவுச் சாலை, மாமல்லபுரத்திலிருந்து காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 196 அடி அகலத்துடன் அமைய உள்ளது.  இதனால் வாகனங்கள் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இந்த சாலை பணிகள் முடிவடைந்து,  ஜனவரி 2026 இறுதிக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டமாக  நடைபெற்று வருகிறது.  சென்னை பெரிபெரல் ரிங் ரோடு என்ற பெயரில் அமைக்கப்படும் இந்த “பார்டர் ரோடு” விரைவில் பயன்பாட்டு வர  ஜரூராக பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையை அடுத்து உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை மனதில் வைத்து இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.  மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டு, 196 அடி அகலத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் துவங்கி எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 132 கி.மீ.க்கு 2 கட்டங்களாக சாலை அமைக்கப்படும். 5. 5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும்.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) மூலம் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்திற்கு ₹2,673 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது,​​கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து 2 கட்டப் பணிகள் நடைபெறும்.  இந்த சாலை திட்டத்துக்கு மதிப்பிடப்பட்ட மொத்த  செலவு: ரூ. 12,301 கோடி. இந்த  திட்டத்தின் நீளம்: 132.87 கிமீ (தோராயமாக).   10 வழியாக சாலையாக அமையும் இந்த சாலையில்,  மெயின் சாலை 6 பாதைகள் + இருபுறமும் 2 சேவைப் பாதைகள் இடம்பெறும். இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும்போது, இதில் குறைந்தது 120 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும். இந்த சாலை பணி, தற்போது,  எண்ணூர் – தச்சூர்  இடையே கட்டுமானத்தில் உள்ளது.

இந்த சாலையானது   சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவாயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.  இதில்,  இரு சக்கர வாகனங்கள் சர்வீஸ் ரோடுகளில் மட்டும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மெயின் சாலையில் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி, எல் அண்ட் டி உள்ளிட்ட தனியார் துறைமுக நிறுவனங்கள் தமிழக அரசை வலியுறுத்தின. இந்த சாலை முடிந்தவுடன் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.