அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியை, வெற்றியை எளிதாக நெருங்கி வருகிறது இங்கிலாந்து அணி.

11 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 89 ரன்களை சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி. இன்னும் 54 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு தேவை 36 ரன்கள் மட்டுமே.

அணியின் வெற்றிக்கு 120 பந்துகளில், 125 ரன்களே தேவை என்ற நிலையில், இங்கிலாந்தின் துவக்க வீரர்கள் ஜேஸன் ராய் 32 பந்துகளில் 49 ரன்களையும், ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 28 ரன்களையும் அடித்து அவுட்டாகினர்.

தற்போது டேவிட் மாலனுடன், பேர்ஸ்டோ இணைந்துள்ளார். இந்தியப் பந்துவீச்சாளர்களால் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.