டெல்லி: இந்த ஆண்டில் (2022) முதல் சூரிய கிரகணம் வரும் 30-ந்தேதி நிகழ்கிறது. பகுதி சூரிய கிரகணமான இதை இந்தியாவில் பார்க்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
சூரிய கிரகணம் இந்திய நேரப்படி 30-ந்தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 4.08 மணி வரை நீடிக்கிறது. இந்த கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நிகழ்வதால் இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இது உலகின் பல பகுதிகளில் தெரியும்.
இதுதொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமா நாசா வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி உலகின் பல பகுதிகளில் இருந்து பார்க்க முடியும். தென் அமெரிக்கா, அண்டார்டிகா மற்றும் தெற்கு மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி சூரிய கிரகணம் தெரியும் என்று அறிவித்துள்ளது.
சூரிய கிரகணம் “ஏப்ரல் 30 மாலை மேற்கில் அஸ்தமிக்கும் போது, சிலி, அர்ஜென்டினா, உருகுவே, மேற்கு பராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெருவில் தெளிவான வானம் உள்ளவர்களுக்கு சூரியன் பகுதியளவு மறைந்திருக்கும். மற்றும் தென்மேற்கு பிரேசிலின் ஒரு சிறிய பகுதி தெரியும் என்றும் கூறி உள்ளது.
இந்த சூரிய கிரகணமானது இந்திய நேரங்களின்படி, ஏப்ரல் 30 ஆம் தேதி மதியம் 12:15 மணிக்கு பகுதி சூரிய ஒளி தொடங்கி மே 1 ஆம் தேதி அதிகாலை 4:07 வரை நீடிக்கும். இது 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணம் பல ஆன்லைன் இணையதளங்கள் மற்றும் இணையதளங்களில் ஒளிபரப்பப்படும்.
இதைத்தொடர்ந்து, 2022ம் ஆண்டுக்கான 2-வது சூரிய கிரகணம் வருகிற அக்டோபர் மாதம் 25-ந்தேதி நிகழ்கிறது. இதுவும் பகுதி சூரிய கிரகணம் என்பதால் இந்தியாவில் பார்க்க முடியாது.