டெல்லி: நாடு முழுவதும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள அசாம் மாநில சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையொட்டி இன்று (மார்ச் 2ந்தேதி) வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 9ந்தேதி. மார்ச் 10ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.