பெங்களூரு: ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில அடையாளம் சார்ந்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “முதலில் நான் ஒரு இந்தியன்” என்று பதிலளித்து, பலரின் பராட்டுதல்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன்.
அவரிடம் கேள்விகேட்ட தமிழகத்தின் சன் டிவி நிருபர் ஒருவர், தமிழ்நாட்டிலிருந்து வந்து இவ்வளவு பெரிய பொறுப்பில் அமர்ந்திருக்கும் நீங்கள், தமிழக மக்களுக்கு சொல்லக்கூடியது என்ன? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சிவன், “முதலில் நான் ஒரு இந்தியன். நான் இஸ்ரோவில் ஒரு இந்தியனாகத்தான் சேர்ந்தேன். நாட்டின் அனைத்துப் பிராந்தியங்கள் மற்றும் மொழி பேசும் மக்களும் ஒன்றாக இணைந்து பணிசெய்து, தங்களின் பங்களிப்பை செய்யும் ஒரு இடம்தான் இஸ்ரோ.
அதேசமயம், என்னைக் கொண்டாடும் எனது தமிழ் சகோதரர்களுக்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன்” என்றார் சிவன்.
இவரின் இந்தக் கருத்துக்கு பலதரப்பிலிருந்தும் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. சமூகவலைதளங்களில் சிவனை பலரும் பாராட்டி மற்றும் ஆதரித்து வருகிறார்கள்.