டோக்யோ

ப்பானில் முதல் முறையாக ஒரு இந்தியர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த மாதம் 21 ஆம் தேதி ஜப்பான் நாட்டின் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஜப்பான் நாடில் பல வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர், அதில் சுமார் 34000 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களைத் தவிர சீனா, கொரியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் டோக்யோ நகரத்தில் உள்ள எடோகவா வார்டில் இந்தியாவை சேர்ந்த யோகேந்திர புராணிக் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஜப்பான் தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். ‘யோகி’ என அழைக்கப்படும் இவருக்கு 6,477 வாக்குகள் கிடைத்துள்ளன. இவர் ஐந்தாவது அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் ஆவார்

யோகி கடந்த 1997 ஆம் வருடம் ஜப்பானுக்கு வந்தார். அப்போது அவர் இந்திய பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றதால் இரு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தார். ஜப்பானில் பொறியாளராக பணியில் சேர்ந்த யோகி அதன் பின்னர் வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணி புரிந்த அனுபவம் உடையவர் ஆவார். சுமார் 42 வயதாகும் இவர் கடந்த 2005 முதல் எடோகவா பகுதியில் வசித்து வருகிறார்.