மும்பை: இந்தியாவில் முதன்முறையாக, ஏர் இந்தியா விமானங்களில் இலவச வைஃப இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு விமான பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அதன் சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் இலவச இன்டர்நெட் சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்குள் விமானங்களில் இணைய சேவையை வழங்கும் முதல் விமான நிறுவனம் என்ற பெருமையை ஏா் இந்தியா பெற்றுள்ளது.
இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா குழுமம் கையகப்படுத்தி, பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது குறிப்பிட்ட விமானங்களில் இலவச இணையதள வசதியை அறிமுகப்படுத் உள்ளது. உள்நாட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில், இணைய இணைப்பு கிடைக்கும் வகையில், வைஃபை இணைப்பை வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இதன்படி உள்நாட்டு விமானத்தில் இன்பிளைட் இன்டர்நெட் வழங்கும் இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது. இந்த சேவையின் மூலம், 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும். இந்த சாதனங்களை ‘ஏர் இந்தியா வைஃபை’ நெட்வொர்க்குடன் இணைத்து தங்கள் PNR மற்றும் கடைசி பெயரை உள்ளிட்டு பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, பயணிகள் ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்பஸ் ஏ321நியோ விமானங்களில் உள்நாட்டு வழித்தடங்களில் இந்த இலவச வைஃபை இணைய சேவையைப் பெறலாம். பயணிகள் தங்கள் லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த இலவச இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
இது தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தோ்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்களில் ‘வைஃபை’ (வயா்லெஸ் இணையம்) சேவை வழங்கப்படும். சா்வதேச விமானங்களான ஏா்பஸ் ஏ 350, ஏா்பஸ் ஏ 321 நியோ மற்றும் போயிங் பி 787-9 விமானங்களைப் பயன்படுத்தி சா்வதேச விமானங்களில் ஒரு சோதனை முயற்சியாக முதலில் பின்பற்றுகிறது. பயணிகள் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு இயக்க முறைமைகளைக் கொண்ட தொலைப்பேசிகளில் இந்த இணைய சேவையை பயன்படுத்தலாம். விமானம் 10,000 அடிக்கு மேல் இருக்கும்போதும் ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைக்க இந்த சேவை அனுமதிக்கிறது. தற்போது இலவசமாக வழங்கப்படும் இந்த சேவை, படிப்படியாக தனது மற்ற விமானங்களுக்கும் ஏா் இந்தியா விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச தடங்களில் பயணிகளுக்கு ஏர் இந்தியா இந்த புதிய வைஃபை வசதி சோதனையை நடத்தியதைத் தொடர்ந்து தற்போது இந்த சேவை விரிவாக்கப்பட்டுள்ளது.