லண்டன்: பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசிகள் முதல் முறையாக தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருக்கின்றன.
அவசர கால பயன்பாட்டுக்கு என பிரிட்டன் அரசானது 8 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளளது. தடுப்பூசியை பராமரிப்பது சற்று சிக்கலானது ஒன்றாகும். அதனை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும். சாதாரண குளிர்சாதனப்பெட்டியில் அதாவது 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சில நாள்கள் மட்டுமே வைத்திருக்க முடியும்.
பிறகு மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்க வேண்டும். அப்போது தான் பாதுகாப்பாக இருக்கும். அதேபோன்று தடுப்பூசியை பயன்படுத்தும் சில மணி நேரங்களுக்கு முன்னரே குளிர்நிலையிலிருந்து அறை வெப்பநிலைக்கு மாற்ற வேண்டும்.
பிரிட்டனில் முதல்கட்டமாக உள்ளூர் மருத்துவர்களின் அலுவலகங்கள், சுகாதார மையங்களில் வரும் 14ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.