நியூயார்க்,
முதன்முதலாக விண்வெளிக்கு சென்று வந்த அமெரிக்க வீரர் ஜான் கிளன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95.
அமெரிக்க முன்னாள் விண்வெளி வீரர் ஜான் கிலன். 95 வயதான இவர் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது உடல்நிலை சீரியசானதை தொடர்ந்து கொலம்பசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை பரிதாபமாக இறந்தார்.
இவர் கடந்த 1962-ம் ஆண்டு விண்வெளிக்கு சென்று வந்தார். இவர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் வீரர் ஜான் கிளன்.
விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய அவர் 1974-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க செனட் சபையின் ஜனநாயக கட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.‘
அதைத்தொடர்ந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு, 1998-ம்ஆண்டு மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது வயது 77.
இதன் மூலம் விண்வெளிக்கு சென்ற மிக வயதான வீரர் என்ற பெருமையையும் அவர் தட்டிச்சென்றார்.