டில்லி:

டில்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால் தீபாவளிக்கு ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என பட்டாசு தொழிற்சாலை மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 85 சதவீத பட்டாசு தேவையை தமிழகத்தில் உள்ள சிவகாசி பட்டாசு தொழிற்ச £லைகள் தான் பூர்த்தி செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இதர மாநில அரசுகளும் பின்பற்ற தொடங்கினால் தங்களது நிலைமை என்ன ஆகும்? என தொழிற்சாலை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு பட்டாசு தொழிற்சாலைகள் சங்க தலைவர் ஆசைத் தம்பி கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகை சமயத்தில் தான் நாங்கள் லாபம் பார்க்க முடியும். உச்சநீதிமன்ற உத்தரவால் பல தொழிற்சலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால் ஒரு வார காலத்திற்கு தான் சுற்றுசூழல் பாதிக்கும். ஆனால் வாகனங்கள் 365 நாட்களும், 24 மணி நேரம் சுற்றுசூழலை பாதிக்கிறது. அவற்றை என்ன செய்வது? ’’ என்றார்

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். இதை சார்ந்த பேக்கிங், பிரின்டிங், போக்குவரத்து என மேலம் 5 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பழைய டில்லியில் உள்ள ஜமா மஸ்ஜித், சதார்பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் தீபாவளி பண்டிகைக்காக பல நூறு கோடி ரூபாய் பட்டாசுகளை வாங்கி இருப்பு வைத்துள்ளனர். இது நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகிவிட்டது.

டில்லியை சேர்ந்த விற்பனையாளர் அமித் ஜெயின் என்பவர் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவால் அனைத்து டீலர்கள் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 500 சிறு வியாபாரிகள் பட்டாசு விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே 28 சதவீத வரி விதிப்பால் பட்டாசு தொழில் பாதித்துள்ளது. இருப்பு வைத்துள்ள பட்டாசுகள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

சிவகாசியில் உள்ள பெரிய தொழிற்சாலை நிர்வாகங்கள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தடை பெற நடவடிக்கை எடுப்பார்கள் என்று வியாபாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.