இந்தூர்:
த்திய பிரதேச மாநிலத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென பற்றிய தீயை அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்தூர் பகுதியில் உள்ள (GPO) பெட்ரோல் பங்கிற்கு டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி கண்டெய்னரின் பின்புறத்தில் இருந்து புகை வந்து தீப்பிடித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் லாரில் பற்றிய தீயணைக்கும் கருவி மூலம் உடனடியாக தீயை அணைத்தனர். தொடர்ந்து, அருகில் இருக்கும் இடங்களுக்கு தீ பரவுவதற்கு முன் டிரைவர் அந்த இடத்திலிருந்து லாரியை வெளியே ஓட்டிச் சென்றார்.