கொல்கத்தா,
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயைணப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
தீவிபத்து காரணமாக அங்கிருந்த ஊழியர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மத்திய கொல்கத்தாவின் ஜவகர்லால் நேரு சாலையில் ஜீவன் சுதா என்ற வணிக வளாகம் உள்ளது. . 19 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் 16-வது தளத்தில் இன்று காலை 10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கட்டித்தில்எ ல்.ஐ.சி. அலுவலகம், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இதில் செயல்படுகின்றன. தீ தற்போது படிப்படியாக அந்த தளம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் உடனே அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஏராளமான தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.