புனே
இன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று பயங்கர வெடிச் சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் தவுந்த் தாலுக்காவில் குர்கும்ப் பகுதியில் ஒரு தனியார் ரசாயன ஆலை இயங்கி வருகிறது.
இன்று காலை இங்குப் பலத்த வெடி ஓசையுடன் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த வ்ந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் யாரும் பாதிப்பு அடையவில்லை என கூறப்படுகிறது.
இந்த பகுதியில் கடுமையாக கரும் புகை சூழ்ந்துள்ளது.
அந்த இடத்தை கால்வதுறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.