ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள  தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட  தீ விபத்தில், டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்டின் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தில் உள்ளது ஹஜ்ரா நினைவு மருத்துவமனை. அந்த பகுதியில் பிரபல மருத்துவமனையான இதையொட்டி,  குடியிருப்பு வளாகமும் அமைந்துள்ளது. அந்த குடியிருப்பு வளாகத்தில் டாக்டர் தம்பதியும் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் நள்ளிரவு 1மணி அளவில்  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக,  , அந்த குடியிருப்பு பகுதி புகை மூட்டத்தால் சூழப்பட்டது. இதில், அங்கு குடியிருந்து வருபவர்களின் வீடுகளிலும் புகை பரவியுள்ளது. இந்த சம்பவத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டில் வசித்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர்.

இந்த குடியிருப்பில் வசித்துவந்த டாக்டர் விகாஸ் ஹஜ்ரா, அவரது மனைவியான டாக்டர் பிரேமா ஹஜ்ரா வேளையாள் உள்பட  5 பேர் உயிரிழந்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மற்றொரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால், மொத்தம் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மீட்புபணிகளை மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்டவர் களையும் மீட்டு வேற மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் காயமடைந்த  5 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 2 நாய்களை தீயணைப்பு துறை மீட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் இருந்த 25 நோயாளிகள் உடனடியாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.