மும்பை:
தெற்கு மும்பை கொலாபா பகுதியில் ராணுவ அலுவலகங்கள் உள்ளது.
இங்குள்ள 4 மாடி கட்டிடத்தில் இன்று இரவு 7 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.