
அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.
லாக்டவுனுக்கு பிறகு FIR படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குனர் கவுரவ் படத்தில் போலீஸ் ரோலில் நடிக்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று விஷ்ணுவிஷால் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பயணம் என்ற பாடல் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். செம ரொமான்டிக்கான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
[youtube-feed feed=1]