மும்பை: பாலியல் வன்புணர்வு புகாரின் அடிப்படையில், நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி யோகிதா பாலி, மகன் மஹாக்ஷய் மீது மும்பை காவல்துறைடியில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி சினிமாவில் பிரபலமானவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ்களின் ஸ்டைலிஷ் நாயகனாக வலம் வந்த மிதுன் சக்கரவர்த்தி, இந்தி மட்டுமின்றி தவிர பெங்காலி, ஒரியா உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தமிழிலும், “யாகவாராயினும் நாகாக்க” என்ற படத்தில் மும்பை தாதாவாக நடித்துள்ளார். இதுவரை சுமார் 570க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மஹாக்ஷய் மீது, அவரது முன்னாள் காதலி என கூறப்படும் இளம்பெண் ஒருவர் கூறிய புகாரின் அடிப்பைடயில், மஹாக்ஷய் மற்றும் மிதுனின் மனைவி யோகீதா பாலி மீது கற்பழிப்பு, , கட்டாய கருக்கலைப்பு, மோசடி குற்றச்சாட்டில் மும்பை ஓஷிவாரா காவல்நிலையத்தில் முதல்தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டில், திருமணம் செய்வதாக ஏமாற்றி சுமார் நான்கு ஆண்டுகளாக அவருடன் உடல் ரீதியான உறவில் இருந்தபின், மஹாக்ஷய் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார். மேலும், அந்த காலத்தின்போது, மகாக்ஷேயால் போதை மருந்து உட்கொண்டதாகவும் பின்னர், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர், அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். தான் கர்ப்பமடைந்த பின், கருக்கலைப்பு செய்ய தனக்கு அழுத்தம் கொடுத்தார். அதற்கு தான் ஒப்புக்கொள்ளாதபோது, அவர் தனக்கு சில மாத்திரைகள் கொடுத்து குழந்தையை கருக்கலைப்பு செய்தார் என்று அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மஹாக்ஷய்-ன் தாயும், நடிகருமான மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியும் தன்னை மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக ஏற்கனவே புகார் பதிவு செய்ய முயற்சித்ததாகவும், ஆனால், போலீசார் அதை பதிவு செய்யவில்லை. இருப்பினும், தான் டெல்லிக்கு மாறிவிட்ட நிலையில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என டெல்லி உள்ளூர் நீதிமன்றத்தில் அந்த பெண் முறையிட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ரவி சோனி, “அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நான்கு ஆண்டுகளாக அறிந்திருந்தனர். அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஏமாற்றினார். அவன் அவளது பானத்தில் ஒரு மயக்க மருந்து கலந்து அவள் மீது தன்னை கட்டாயப்படுத்தினான். பின்னர் அவர் அவளுக்கு திருமணம் செய்வதாக உறுதியளித்தார், ஆனால், இறுதியில் அவளை ஏற்க மறுத்துவிட்டார் என்று தெரிவித்து உள்ளார்.
Patrikai.com official YouTube Channel