பாட்னா:
25 வயது மாணவி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் பாஜக எம்எல்ஏ வினய் பிஹாரி மீது பாட்னா போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாட்னாவின் பூத்நாத் சாலையில் அமைந்துள்ள முற்போக்கு காலனியில் வசிப்பவர் ரிஷிமா ராஜ். அவர் பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு வணிகவியல் கல்லூரிக்குச் சென்றிருந்தார். மதியம் 2 மணியளவில் திரும்பி வர வேண்டிய அவர் திரும்பி வராததால். அவரது தாயார் ரேகா குமாரி, ரிஷிமாவை போனில் அவளைத் தொடர்பு கொண்டார். அப்போது ரிஷிமாவின் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், 3.10 மணிக்கு ரிஷிமாவின் போனில் இருந்து ரேகாவுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் 7304210830 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அதை பாஜக எம்எல்ஏ வினய் பிஹாரி எடுத்து பேசியுள்ளார். மேலும்,
ரேகாவை மிரட்டியுள்ளார். அந்த பெண் தனது மருமகன் ராஜீவ் சிங்கிடம் இருப்பதாகவும், எஸ்பி அல்லது டிஎஸ்பியிடம் சென்று எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் ரேகாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரேகா கொடுக்க புகாரின் பேரில், வினய் பிஹாரி மீது பாட்னா போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர் என்று அந்த கூறினார்.

பெட்டியாவில் உள்ள லாரியா சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான வினய் பிஹாரி இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.